ப்ரியம் கலெக்டிவ் என்பது பன்மைத்துவமான, விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்ட குரல்களின் பலம் வாய்ந்ததொரு தளமாகும். விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றும் ஒடுக்குமுறை , பாகுபாடு, வன்முறை என்பவற்றுக்கு முகங்கொடுத்து வருபவர்கள் ஒன்றிணைந்து, தமது அனுபவங்களைத் தமக்கு அர்த்தம் சேர்க்கக்கூடிய விதத்தில் உள்வாங்கிச் செயலாற்றவும், தாம் விரும்பும் மாற்றத்தை நோக்கிச் செயற்பட விரும்பின், அதனை நோக்கிச் செயற்படவுமான தளத்தையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துவதனையும் இக்கலெக்டிவ் இலக்காகக் கொண்டுள்ளது.  மேலும் ப்ரியம் என்பது மிகுந்த அன்புக்குரியதொரு குயர் பெண்ணிய தோழர் ப்ரியா தங்கராஜாவினது பெயரை ஒட்டியதுமாகும். அவருடையதும், ஏனைய பல தோழர்களதும் வாழ்வியல் அனுபவங்கள் எமக்கு வழிகாட்டுவதுடன், இக்கலெக்டிவ் இற்குப் பலமூட்டும். தமிழில், ப்ரியம் என்பதற்கு, அன்பு, காதல், பாசம் நட்பு எனப் பல பொருள்கள் உண்டு சிங்களம் உட்பட பல தெற்காசிய மொழிகளிலும் ப்ரியம் என்பதற்கு இணையான அர்த்தங்கள் காணப்படுகின்றன. 

ப்ரியம் கலெக்டிவ், 2018 ஆம் ஆண்டு இலங்கையின் வெவ்வேறு சமூக, கலாசார, பாலியல்பு பின்னணிகள் மற்றும் வாழ்விடங்களைக் கொண்ட கொண்ட மூன்று தோழர்களால் தோற்றுவிக்கப்பட்டது. விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படுதல் , ஒடுக்கப்படுதல், பாகுபாடு மற்றும் வன்முறை என்பவற்றுடனான எமது அனுபவங்கள், இந்த அனுபவங்களின் குறுக்குவெட்டுப் பகுப்பாய்வுகள் , சமூகத்தில் எமக்குள்ள சலுகைகள் மீதான விமர்சனரீதியான பிரதிபலிப்புகள் என்பன மீண்டும் மீண்டும் எம்மை ஒன்றிணைத்தன. அவ்வாறாக எமது கதைகளின் அர்த்தம் சேர்க்கும் செயற்பாடுகள் நாங்கள் இணைவதற்கும், வெவ்வேறு சமூகத்திலுள்ளவர்களுடன் ஒன்று சேர்வதற்கும் உதவியது. ப்ரியம் கலெக்டிவானது, பன்மைத்துவமான, விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்டவர்களின் குரல்களின் பலம் வாய்ந்த தளமாக வளர்ந்துள்ளது. நாங்கள் காண விரும்பும் மாற்றத்தை நோக்கி நாம் ஒன்றுபட்டுத் தேடி, ஆராய்ந்து, செயற்பட்டு முன் செல்கிறோம்.

எங்கள் இலக்கு

Priyam Collective aims to voice and explore intersectional experiences of marginalised sections of our society that help question dominant norms and practices and broaden understandings of sex, gender, sexuality, class, caste, disability, ethnicity, language, religion and other forms of marginalisation in Sri Lanka. 

எமது அணுகுமுறைகள்

ப்ரியம் கலெக்டிவானது, உடல் ஒருமைப்பாடுகள், பாலியல்பு, பால் மற்றும் பால்நிலை தொடர்பான கேள்விகள் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதற்காக குயர் மற்றும் பெண்ணிய அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறது. அதேசமயம், எங்களதும் உள்ளடங்கலாகக் காணப்படுகின்ற வரையறைகளையும், சலுகைகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் கேள்விக்குட்படுத்தும் இயல்பினை வளர்ப்பதில் கலெக்டிவ் உறுதுணையளிக்கும். இவ்வாறான செயல்முறைகள் சமூகம் என்ற ஆழமான உணர்வுடன் ஒரு வலுவான கலெக்டிவைக் கட்டியெழுப்பவும், பலப்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Tamil