எங்கள் இடையீடுகள்

பால், பால்நிலை , பாலியல்பு , பெண்ணிலைவாதம், குயர் அரசியல் மற்றும் கருக்கலைப்பு உட்பட பாலியல் மற்றும் மகவுற்பத்தி உரிமைகள், சட்டச் திருத்தங்கள், வலுவிழப்பு/மாற்றுத்திறன் தொடர்பான பிரச்சினைகள், வர்க்க மற்றும் சாதியப்பிரச்சனைகள், இலங்கையில் பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக சிந்தித்து, கேள்விக்குட்படுத்துவதற்கு பல்வகைமையான சமூகத்தவர்களை ஒன்றாகக் கொண்டுவரும் வகையில் கடந்த சில ஆண்டுகளில், ப்ரியம் கலெக்டிவானது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல செயலமர்வுகளை நடத்தியது. அத்துடன் இவ்விடயங்கள் சார்ந்து விமர்சனக் கண்ணோட்டத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடாத்துவதுடன் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு வழிவகைகளில் சமூக உறுப்பினர்கள் பலருக்கு ஆதரவளித்துள்ளோம். எமது பயணங்களில் நாம் முன்னேறிச் செல்லுகையில், இதனை ஒத்த பிரக்ஞையுடையவர்கள் மற்றும்/அல்லது எம்மையும் ஆக்கபூர்வமான வழிகளில் சவாலுக்குட்படுத்தி, அக்கறையுடன் புத்தாக்க மாற்றீடுகளை முன்வைப்பவர்கள் இத்தளத்தை/கலெக்டிவ் இனை தொடர்ந்தும் வடிவமைத்துச் செல்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

வரலாற்றுரீதியான வன்முறை தொடர்பான உள்ளடக்கம்

இலங்கையில் பால் , பால்நிலை, இனம், வகுப்பு , சாதியம் , வயது, மதம்/நம்பிக்கை, பாலியல்பு , மொழி மற்றும் வலுவிழப்பு/மாற்றுத்திறன் போன்ற பல அடிப்படையில் பிரிவினைகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சமூகங்களை இலக்காகக் கொண்ட வன்முறைச் செயல்கள் மற்றும் குறிப்பிட்ட தேசியவாதத்தை, பால்வாதத்தை, தற்பாலீர்ப்பு வெறுப்பினை, வெளிநாட்டவர் மீதான வெறுப்பினை, இன மற்றும் மத சித்தாந்தங்களை நாட்டில் நிலைநாட்டுவதற்கான அதிகரித்த போக்கு என்பன ஏற்கனவே குறிப்பிடத்தக்க காலத்திற்கு இன முரண்பாடுகளால் உடைந்து, பிரிந்து போயுள்ள இச்சமூகங்களுக்கு மேலதிக சவால்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும், சந்தேகத்திற்கு இடமின்றி, இது பிரதானமாக பால்பல்வகைமையினர், திருநர்கள் மற்றும் பெண்களையும், சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, வேறுபாடுகள் இருந்த போதிலும் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட குழுக்கள் ஒன்றிணைவதற்கான தேவை மிக அவசியமாகவுள்ளது. இது பெண்ணிலைவாதங்கள் மற்றும் குயர் இயல்பு பற்றிய ஆழமான புரிதலினை வழங்குகிறது என நாம் நம்புகிறோம். 

பால், பால்நிலை மற்றும் பாலியல்பைக் கேள்விக்குட்படுத்துதல்

In 2018, we, the now Priyam Collective, carried out a project called “The Question of Gender: Enhancing Analytical Fields Based on Feminist Perspectives Among Women Activists and Young Women Community Workers in Northern Sri Lanka” to i) expand the understanding of gender by questioning the prevailing narratives of the gender binary, and ii) identify innovative ways of engaging with the question of gender. Since then, we have been conducting residential discussions (three days long) with women/trans activists and young women community workers from the North and the East of Sri Lanka. The concepts addressed include sex, gender, sexuality, disability, queerness, feminisms, intersectionality, and identity politics. An interactive methodology facilitated the process of challenging many social and cultural barriers when trans persons, intersex persons, and women from different backgrounds gathered to think beyond the popularly established categories and social norms—for example, reading material and documentary and feature films in Tamil on the experiences of those who have been questioning social exclusion like sex, gender, sexuality, caste, class, ethnicity, religion, and language. 

பால், பால்நிலை, பாலியல்பு, இனம், மதம், வலுவிழப்பு/மாற்றுத்திறன் மற்றும் மொழி என்பவற்றின் குறுக்குவெட்டுத் தன்மை

In the context of post-Easter attacks in Sri Lanka, we shared a desire to expand these conversations with activists from various backgrounds who bring nuances across different forms of marginalisation. On 31 August 2019, in the Eastern town of Batticaloa, a group of trans and women activists and young community workers from different parts of Sri Lanka came together to share their thoughts on the need to expand the question of sex and gender beyond the dominant binary. The unintended outcome of this gathering was a profound sense of community and collaboration. Their sharings were based on their experiences of doing community activism and the obstacles they have been facing to challenge sex and gender norms and practices, like the Muslim women activists from the East for reforming the Muslim Marriage and Divorce Act, artists who use art forms to question gender identities, activists who work on disability rights, and members from the LGBTQIA+ community. The young Muslim women activists very clearly expressed their interest in questioning sex and gender inequalities in their communities.

மேலும், இதில் பங்கேற்றவர்கள் பாலியல்பு பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் தங்கள் சொந்த சமூகங்களின் உதாரணங்களைப் பற்றி சிந்தித்து, வித்தியாசங்களை புரிந்துகொள்வதற்கான சமூகக் கருவிகள் தங்களிடம் இல்லை என்று பகிர்ந்து கொண்டனர். இவை உரிமைக் கண்ணோட்டத்தில் பகிரப்பட்டன. இத்தளம் மரியாதை, அங்கீகாரம் , தைரியம், ஒத்துணர்வு, அக்கறை மற்றும் வேறுபாடுகளைக் கடந்த அன்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்டது. அப்போதிருந்து, நாங்கள் இத்தளத்தை வளர்த்து, ஒத்துழைப்புணர்வை ஊக்கப்படுத்தி வருகிறோம். இது பல்வேறு முறைகளையும், வடிவங்களையும் எடுத்துள்ளதுடன், மேலும் விரிவடைந்துள்ளது. ஆழ்ந்த மனநிறைவோடு இந்தப் பணியைத் தொடர்கிறோம்.

கொவிட் -19 இன் பின்னணியில்

கலெக்டிவானது, நமது சமூகங்களின் உளநல ஆரோக்கியத்தில் முக்கிய கவனஞ் செலுத்துகிறது. கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் உலகை உலுக்கியபோது, கடந்த காலங்களில் சவாலான கஷ்டங்களிலிருந்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த சூழ்நிலையை நாங்கள் அணுகினோம். ‘இதுவும் கடந்து போகும்!’ என்ற நம்பிக்கையை நாங்கள் தொடர்ச்சியாக எம்முள் வைத்திருக்கிறோம். நமது பலம் மற்றும் மட்டுப்பாடுகள் பற்றிய தீவிர விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வது நமது அடிப்படைப் பெறுமானங்களில் ஒன்றாகும். நாங்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடுகிறோம், ஒன்றுபடுகிறோம் (இணையவழி), பகிர்ந்து கொள்கிறோம், வளர்கிறோம். 

இடையூறற்ற இணைய இணைப்புக்கான அணுகல் பெரிய சவாலாக இருந்தபோதிலும், செயற்பாட்டாளர்களும் , சமூகப் பணியாளர்களும் கொவிட் சமயத்தில் இணைய வழி ஒன்று கூடலில் பயனடைந்து வருகின்றனர். இந்த இணையவழி ஒன்றுகூடல் வெறும் சுகம் விசாரித்தலுக்கும் அப்பாலானது என்று அவர்கள் பகிர்ந்துள்ளனர். ஒவ்வொரு முறையும், அந்த இரண்டு மணிநேரம் அவர்கள் மகிழ்ச்சியடையவும், உடனடி இக்கட்டான சூழ்நிலையை மறக்கவும் உதவுகிறது. அவர்கள் பாடல்களைப் பாடுவதற்கும், தங்கள் போராட்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருடைய அனுபவங்களை ஒத்துணர்வுடன் கேட்பதன் மூலம் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் பயணங்களைப் பிரதிபலிக்கும் போது தலைப்புகள் மற்றும் கருத்துக்கள் இயல்பாக வெளிப்படும்போது அவை பற்றிக் கலந்துரையாடுவதற்கும், மேலும் ஆழமான ஒருங்கிணைதல் உணர்வினை வளர்க்கவும் ஒன்று கூடுகிறார்கள். இப்படி ஒன்றுகூடுவது, தங்களது நன்னிலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இணைந்த பயணங்களின் தோழர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றுகூடலினை இரத்து செய்ய நேர்கையில் அவர்கள் தங்களது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இணைய வழி ஒன்றுகூடல்கள் மூலமாக பால் மற்றும் பால்நிலை இருமைக்கு அப்பால் சிறுவருக்கான நூல்களை வடிவமைக்க சிலர் உந்துதல் பெற்றுள்ளனர்; சிலர் சுய பாதுகாப்பு பற்றியும் மற்றும் ஒட்டுமொத்தமாக ஒருவர் மற்றவரின் நலம் பற்றியும் கவனம் கொள்கின்றனர்; மேலும் சிலர் தொடர்ச்சியான ஈடுபாட்டின் மூலம் சேர்ந்தியங்குதல் மற்றும் சேர்ந்தியங்குதலின் சக்தி என்பவற்றில் தொடர்ச்சியான அர்த்தங்களைக் காண்கின்றனர். 

ப்ரியம் கலெக்டிவ், விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களில் இருந்து பாதிக்கப்படக்கூடிய நபர்களை நிதிரீதியாகவும் ஆதரித்துக், கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கிறது. ஆகவே, சில இணைந்த பயணங்களின் தோழர்களுக்கு மாதாந்த பங்களிப்புத் தொகை வழங்கப்படுகிறது. நாங்கள் பிரதானமாக கலெக்டிவின் தோழர்களுடைய நிதிப் பங்களிப்புகளையே நம்பியுள்ளோம். செயற்பாட்டாளர்களுக்கான தேவைகள் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் இதற்கான தெரிவானது கலெக்டிவ் குழுவால் செய்யப்படுகிறது. 2020/2021 இல் நிதி உதவியானது அவர்களின் வாழ்விற்கும், சமூகத்தினை ஊக்கப்படுத்தும் அவர்களது செயற்பாடுகளுக்காகவுமாக வழங்கப்பட்டது. 

திருநர்களுடைய அனுபவங்களை நிலையாகப் பேணுதல் மற்றும் ஆவணப்படுத்துதல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒருங்கிணைவினைக் கட்டியெழுப்புதல், மாற்றுத்திறனாளிகளால் அங்கீகரிக்கப்பட்ட சமூக மாற்றத்திற்கான வினைத்திறனான வழிவகைகளைக் கண்டறிதல், கொவிட் - 19 இனால் அதிகரித்த சவால்களுக்கு மத்தியிலும் உயர்கல்வியை முடிக்க வேண்டும் என்ற விருப்பத்திற்காக போராடுதல், மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் அடிப்படையில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான போராட்டத்தைத் தொடர்வது என்பன தோழர்களினால் செய்யப்படுகின்ற தொடர்ச்சியான போராட்டங்களின் சில எடுத்துக் காட்டுகளாகும். 

Tamil