ப்ரியம் கலெக்டிவ் என்பது பன்மைத்துவமான, விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்ட குரல்களின் பலம் வாய்ந்ததொரு தளமாகும். விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றும் ஒடுக்குமுறை , பாகுபாடு, வன்முறை என்பவற்றுக்கு முகங்கொடுத்து வருபவர்கள் ஒன்றிணைந்து, தமது அனுபவங்களைத் தமக்கு அர்த்தம் சேர்க்கக்கூடிய விதத்தில் உள்வாங்கிச் செயலாற்றவும், தாம் விரும்பும் மாற்றத்தை நோக்கிச் செயற்பட விரும்பின், அதனை நோக்கிச் செயற்படவுமான தளத்தையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துவதனையும் இக்கலெக்டிவ் இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் ப்ரியம் என்பது மிகுந்த அன்புக்குரியதொரு குயர் பெண்ணிய தோழர் ப்ரியா தங்கராஜாவினது பெயரை ஒட்டியதுமாகும். அவருடையதும், ஏனைய பல தோழர்களதும் வாழ்வியல் அனுபவங்கள் எமக்கு வழிகாட்டுவதுடன், இக்கலெக்டிவ் இற்குப் பலமூட்டும். தமிழில், ப்ரியம் என்பதற்கு, அன்பு, காதல், பாசம் நட்பு எனப் பல பொருள்கள் உண்டு சிங்களம் உட்பட பல தெற்காசிய மொழிகளிலும் ப்ரியம் என்பதற்கு இணையான அர்த்தங்கள் காணப்படுகின்றன.
