எமது அணுகுமுறைகள்

ப்ரியம் கலெக்டிவானது, உடல் ஒருமைப்பாடுகள், பாலியல்பு, பால் மற்றும் பால்நிலை தொடர்பான கேள்விகள் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதற்காக குயர் மற்றும் பெண்ணிய அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறது. அதேசமயம், எங்களதும் உள்ளடங்கலாகக் காணப்படுகின்ற வரையறைகளையும், சலுகைகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் கேள்விக்குட்படுத்தும் இயல்பினை வளர்ப்பதில் கலெக்டிவ் உறுதுணையளிக்கும். இவ்வாறான செயல்முறைகள் சமூகம் என்ற ஆழமான உணர்வுடன் ஒரு வலுவான கலெக்டிவைக் கட்டியெழுப்பவும், பலப்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இது எங்களை சமூகங்களுக்குள், சமூகங்களுக்கிடையில் மற்றும் சமூகங்களுக்கு வெளியே வெவ்வேறு வடிவங்களிலான அடக்குமுறைகளை எதிர் கொள்கின்ற, பல்வேறு பின்னணியினைக் கொண்ட நபர்களுடன் ஒருங்கிணையவும் வாய்ப்பளிக்கின்றது.நாங்கள் ஒரு கலெக்டிவாக, சமூக மற்றும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் தொடர்பாக நடைபெறுகின்ற கலந்துரையாடல்களுக்குப் பங்களிப்பு செய்து வருகிறோம்.

ப்ரியம் கலெக்டிவானது, இணைந்த பயணங்களின் ஒவ்வொரு தோழர்களும் நட்பு, நேயம் , பொறுப்பு மற்றும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதோடு, எதிர்பார்க்கும் சாத்தியமான விடயங்கள் மற்றும் விரும்பிய மாற்றங்களை நோக்கி, ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்று நம்புகிறது. நாங்கள் அதிகாரப்படிநிலைகளைக் கொண்ட நிறுவனக் கட்டமைப்புகளையும், குழுக்கள் மற்றும் கலெக்டிவ்களுக்குள் கண்ணுக்குப் புலப்படாத அதிகார சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கும் சமூக அதிகாரப்படிநிலைகளையும் கேள்விக்குட்படுத்துகிறோம். எனவே நாங்கள் பிரக்ஞையையும், நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பொறுப்புடமையையும் எமது கலெக்டிவ் இற்குள் ஊக்குவிக்கின்றோம். எவ்வாறாறெனினும் நாங்கள் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கான புதுமையான வழிகளை தொடர்ந்தும் கண்டடைகிறோம்.

கலெக்டிவாக அக்கறை காட்டுதல் , பன்முகத்தன்மையையும் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதலையும் கொண்டாடுதல், சுயம் மற்றும் சமூகம் பற்றிய ஆழமான கூருணர்வை உள்ளடக்குதல், வன்முறையற்ற தொடர்பாடலும், செய்கைகளும், உரிமைகள் அடிப்படையிலான சிந்தனையும், கேள்வி கேட்டலும், இரகசியத்தன்மையைப் பேணுதல், அதிகாரப்படிநிலைகளற்ற வகையில் சேர்ந்து வேலை செய்தலை ஊக்குவிக்கும் வழிகளைக் கண்டறிதல், சேர்ந்து இயங்குதல் மூலமாக சமூகத்தை கட்டியெழுப்பல்/பலப்படுத்தல் என்பன ஆழ்ந்த அர்ப்பணிப்புணர்வோடு நாம் பின்பற்றும் சில அணுகுமுறைகளாகும்.

 

நாங்கள், பலவிதமான பெண்ணிலைவாத சித்தாந்தங்களாலும், அபிலாஷைகளாலும் இயக்கப்படும் இணைந்த பயணங்களை நம்புகிறோம் - இவை மேற்கத்தேய சிந்தனைகளின் அடிப்படையிலன்றி எமது சுதேச அனுபவங்களினால் ஆக்கப்பட்டவையாக, வடிவமைந்தவையாக இருக்கும் என்பதுடன், தொடர்ந்து பரிணாமம் அடைந்து கொண்டிருக்கும். எமது அரசியல்கள் தென்பூகோளத்தின் குறிப்பிட்ட சில வரலாற்றுப் பின்னணிகளிலிருந்து- எவ்வாறு நம்பிக்கையுடன் செயற்படுவது, விமர்சிப்பது, சிந்தனை செய்வது, கற்பனை செய்வது, மீள் கற்பனை செய்வது, ஆதிக்க விழுமியங்களாலும் நடைமுறைகளாலும் எங்கள் மீது திணிக்கப்படும் வரையறைகளுக்கப்பால் எவ்வாறு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளைச் செய்யலாம் என்ற விழிப்புணர்வுடன் உருவாகின்றன.

Tamil