ப்ரியமுள்ள அனைவருக்கும்,


பொருத்தமான நேரங்களில், பொருத்தமான வகைகளில் உலகின் அனைத்து பகுதிகளிலிருக்கும், ஒத்த சிந்தனையுள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், இணைந்து செயற்படவுமான நம்பிக்கையுடன் ப்ரியம் கலெக்டிவ் பெருமிதத்துடன் இந்த வலைத்தளப் பயணத்தை ஆரம்பிக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சி மட்டுமன்றி மக்கள் இயக்கங்கள் பல்வேறு இடங்களில் வரலாறு படைத்து வருகின்ற மிக முக்கியமான காலகட்டமாக இது காணப்படுகின்றது. அதிகாரம் படைத்த அரசாங்கங்களும், தனிநபர்களும் சவாலுக்குட்படுத்தப்பட்டு, அவர்களது பொறுப்புடைமை சார்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகின்றார்கள். நாம் விரும்புகின்ற பலன்களை எம்மால் உடனடியாகக் காண முடியாவிட்டாலும், நாம் விரும்புகின்ற மாற்றத்தைக் காண்பதற்கு எடுக்கின்ற நேரமானது, குறித்த விடயம் சார்ந்து நாம் தொடர்ந்தும் செயற்படவும், எமது கரிசனைகள், எதிர்ப்புகள், நீதி மற்றும் விடுதலைக்கான எமது குரல்களை நசுக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக எமது ஈடுபாடுகளுக்கான யுக்திகளைக் கையாளவும், நம்பிக்கையோடு இருக்கவும் உதவுகின்றது.


இந்த வலைத்தளமானது, ப்ரியம் கலெக்டிவ் இனது அபிலாஷைகள், பெறுமானங்கள், செயற்பாடுகள் மற்றும் கனவுகளைப் பற்றிய அடிப்படையான தகவல்களை அளிக்கின்றது. நாம் கூட்டிணைந்து, தனிநபரினது மற்றும் அல்லது சமூகத்தினது அனுபவத்தின் அடிப்படையிலான விடயங்களைப் பற்றிப் பேசுகிறோம். நாம் மற்றமைப்படுத்துகின்ற நடைமுறைகளையும், வரையறைகளையும் இல்லாதொழிக்க தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்பதுடன், அனுபவங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் பல அடுக்குகளில் சிக்கல்களை ஏற்படுத்துகின்ற நுணுக்கங்களையும், குறுக்கறுக்கும் அத்தனை விடயங்களையும் தேடுகின்றோம். ஒன்றிணைந்து இயங்கும் ஆர்வமுள்ளவர்களுடன் கூட்டாக, பாதுகாப்பான தளங்களை உருவாக்குவதும், அவற்றை நிலைநிறுத்துவதும், பரவலாக்குவதும் எமது தீரா அபிலாஷைகளாக இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.


ப்ரியம் கலெக்டிவ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Tamil